| 0 Kommentare ]


உலகின் மகா குண்டு மனிதரான 310 கிலோ எடை கொண்ட மானுவேல் உரிபே, மிகவும் கனமான பொருட்களை தூக்க உதவும் லிப்ட் மற்றும் பிளாட்பாரம் டிரெய்லர் உதவியுடன், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.மெக்சிகோவில் வசிப்பவர் மானுவேல் உரிபே. இவரின் எடை 560 கிலோவை தாண்டியதால், உலகின் மகா குண்டு மனிதராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததால், அவரின் உடல் எடை 250 கிலோ அளவுக்கு குறைந்தது. இருந்தாலும், படுக்கையை விட்டு எழுந்து அவரால் நடக்க முடியாது. எல்லாமே படுக்கையில் தான்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த உரிபே, 2007ம் ஆண்டு மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியே சென்று வெளியுலகத்தைப் பார்த்தார். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அவரின் இரும்பு படுக்கையை ஆறு பேர் வெளியே தள்ளிச் சென்றனர். அதன்பின்னரே அவர் வெளியுலகத்தைப் பார்த்தார்.

கடந்த மார்ச் மாதமும் அவர் வீட்டை விட்டு வெளியேறி, வெளியுலகத்தைப் பார்க்க நினைத்தார். ஆனால், அவரின் படுக்கையை ஏற்றிச் சென்ற பிளாட்பார டிரக், ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால், அவரால் பெரிய அளவில் எந்தப் பகுதியையும் சுற்றிவர முடியவில்லை. இதன்பின், ஐந்து மாதங்கள் கழித்து சமீபத்தில், முதல் முறையாக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் உரிபே. கனத்த பொருட்களை தூக்க பயன்படுத்தப்படும் லிப்ட் மற்றும் பிளாட்பார டிரெய்லர் உதவியுடன், அவர் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்.

தனக்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே, அவர் மெக்சிகோவின் மான்டெரே நகரில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று, அதன் அழகை ரசித்தார். ஏரிக்கரையில் விற்ற மீனையும் மற்றும் காய்கறிகளையும் வாங்கிச் சாப்பிட்டார். படகோட்டிகளுடன் ஜோக் அடித்துப் பேசினார்.

0 Kommentare

Kommentar veröffentlichen