| 0 Kommentare ]


ஒரு குழந்தை, 'குமரி'யாக, 'குமரனா'க உருமாறும் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, 'சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்...' என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது 'சரி', 'இல்லை' என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.

"திருமணம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். 13 வயதிலிருந்து 19 வயது வரை உடல் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும். பெண்களுக்கு அப்போதுதான் கருப்பை, மார்பகம், மற்றும் ஹார்மோன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும். 21 வயதில் மனமும், உடலும் முழுதுமாக வளர்ந்திருக்கும் என்பதால்தான் 21 வயதில் திருமணம் செய்யலாம். 18, 19 வயதில் திருமணம் செய்து வைக்கும் நடைமுறையும் நம்மிடையே இருக்கிறது. உடல் ரீதியில் பார்த்தால்... அதில் தவறில்லை. என்றாலும் சிலருக்கு அந்த வயதில் கர்ப்பத்தை தாங்கக்கூடிய வலு இருக்காது. அதனால் குறை பிரசவமோ அல்லது அபார்ஷன் பிரச்னைகளோ வரலாம்.

இதுவே 21 வயதில் எலும்புகள் பூரண வளர்ச்சி அடைந்துவிடும். எனவே, 21 முதல் 25 வயது, பெண்களுக்கு திருமணத்துக்கு ஏற்ற வயது. கூடவே, இந்த வயதில் அவர்களுக்கு இடுப்பெலும்புகள் எல்லாம் இளகிய நிலையில் இருப்பதால், பிரசவமும் சுலபமாக இருக்கும். எனவே, 25 வயதுக்குள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விட்டால் தாமதிக்காமல் 'டும் டும்' கொட்டிவிடலாம். அப்படி 25 வயதுக்குள் குழந்தையும் பிறந்துவிட்டால், அந்தக் குழந்தை வளர்ந்து, சம்பாதிக்கும் காலத்தில் நீங்களும் உற்சாகமாக, ஆரோக்கியமாக, ஃபைனான்ஷியலாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

அதுவே திருமணத்தின்போது பெண்களுக்கு வயது 27, 30, 33 என்று அதிகமாகும்போது, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம். வயது ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைப்பதில் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். 35 வயதுடைய தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் குழந்தைக்கு பின்னால் பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோல 30-35 வயதுக்கு மேல் என்றால், பெண்களுக்கு மெனோபாஸுக்கான அறிகுறிகள், உடல்வலி, மனவலியை தர ஆரம்பிக்கும். இதனால், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் சிரத்தையும் குறையலாம்'' என்ற டாக்டர்,

''ஆணோ பெண்ணோ... கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!''

0 Kommentare

Kommentar veröffentlichen