| 0 Kommentare ]



பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.

நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர், இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.

ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர், கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.

ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்து கொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ,
ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.

ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.

நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.

| 0 Kommentare ]



ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

| 0 Kommentare ]



உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.

உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.

உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.

உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.
உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.

உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.

உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.

உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.

உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.

உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.

உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.

| 0 Kommentare ]



" உலகின் புனித பூமி" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்

" மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து.

" கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா

" வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

" உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.

" நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து.

" அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா.

" கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

" ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக் கடல்

" தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.

" ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து.

" நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே

" இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்.

" ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி.

" ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்.

" வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.

"சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.


நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.

காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.

கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.

திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.

வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.

எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.

ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.

குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.

கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.

எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.

பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.

நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.

கூடு கட்டாத பறவை -குயில்.

விதை இல்லாத பழம் -அன்னாசி.

| 0 Kommentare ]


வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா

| 0 Kommentare ]


உக்கிரேன் நாட்டை சேர்ந்த "ஒசான மலய" என்ற பெண் எவ்வித மனித நடத்தைகளையும் காட்டாமல் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டி பார்ப்போரை வியப்பிலும் அதே வேளை சோகத்திலும் ஆழ்த்தி வருகின்றாள்.

"ஒசான மலய" என்ற பெண் முற்றுமுழுதாக நாய்களின் நடத்தையை காட்டுவதற்கான சோகக்கதை இதுதான்:-

1983 ம் ஆண்டு கார்த்திகை மாதம் பிறந்த இப் பெண், குழந்தை பருவத்தில் இயல்பான மனித சுபாவங்களேயே கொண்டிருந்தாள்.ஆனால் அக்குழந்தையின் விதி பெற்றோர்களால் மாறியது. இந்தப் பெண் குழந்தை பருவத்திலேயே குடிகார பெற்றோரால் கைவிடப்பட்டாள்.இதனால் தான் அவ் விபரீதம் நடந்தது.

பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை பின் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நாய்களோடு நாய்களாக கூட்டிலேயே இருந்து 6 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து இருக்கின்றாள்.இதனால் மனித நடாத்தைகளை மறந்து முற்றுமுழுதாக நாயின் நடாத்தைகளுக்கு மாறினாள்.

நாய்களைப்போல் குறைப்பது ,பாய்வது,நடப்பது,உணவுண்பது மற்றும் நீர் பருகுவது என அனைத்து நடவடிக்கைகளும் நாய்களைப் போலவே செய்யத் தொடங்கினாள். ஆறு வருடங்களுக்கு பின் இப் பெண்ணை இனம்கண்டு தத்தெடுத்த சமூக ஆர்வலர்கள் விஞ்ஞானிகளின் உதவியுடன் அப்பெண்ணை மீண்டும் மனித இயல்புகளுக்கு மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஆனால் இன்றுவரை அவ் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் "என்ற பழமொழிக்கு அமைய இப்போது 27 வயதாகும் இப் பெண்ணின் நடத்தைகள் சற்றும் மாறாமல் இன்றுவரை நாய்களின் நடத்தைகளுடனேயே வாழ்ந்து வருகின்றாள் .




| 0 Kommentare ]



நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.


| 0 Kommentare ]



ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் உதைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

இந்த வகையில் வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உதைப்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என அக்டோபஸ் (Paul ) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் இறுதி போட்டியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இந்தது.இந்நிலையில் இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது .இது நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .


| 0 Kommentare ]


இந்திய அரியானாவில் 66 வயதான மூதாட்டி ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். உலகிலேயே முதிய வயதில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற ஒரே பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி. இவரது கணவர் தேவா சிங் ஒரு விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகியும் குழந்தை பேறு இல்லாதிருந்தது. பட்டேரி தேவிக்குக் குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை. எனவே சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. வேதனை அடைந்த தேவா சிங்குக்கு ஹிஸ்சாரில், முதியவர்கள் கூட சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது. ஹிஸ்சாரைச் சேர்ந்த மருத்தவர் அனுராக் இவ்வித சிகிச்சையில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் இவர் அறிந்த் கொண்டார்.

உடனே, முதல் மனைவி பட்டேரி தேவியை அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் மருத்துவர்கள் வைத்தனர். ஆனால் அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை.

அடுத்து, மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின. கடந்த மே 29ம் திகதி பட்டேரி தேவிக்கு சத்திர சிகிச்சை மூலம் 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. 66 வயதான முதியவர் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்திருப்பது, உலகச் சாதனையாகவே கருதப்படுகிறது.

| 0 Kommentare ]



உலகில் ஒரேயொரு இந்து நாடாக விளங்கும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் சங்கா என்ற இடத்தில் 7 கோடி ரூபா செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிவன் சிலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 21ம் திகதி திங்கட்கிழமை இச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வளாகம் ஒன்றில் இது நிறுவப்பட்டுள்ளது.


சிமென்ட் கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 143 அடி. சிவ பெருமானின் தோளில் பாம்பும், கையில் திரிசூலமும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை, நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் திறந்து வைக்கவுள்ளார்.

சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு யோகா, தியான மண்டபங்கள், சுகாதார மையங்கள் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. 16 அறைகள் கொண்ட ஓய்வு விடுதியும் கட்டப்பட்டுள்ளது.

| 0 Kommentare ]


 
வீ‌ட்டில் இருக்கும்போது பால் ஆடையை தினமும் இர‌ண்டு முறை முகத்தில் தடவி வரலா‌ம்.
தினமு‌ம் ‌சி‌றிதளவு ஆர‌ஞ்சு பழ‌ச் சாறை எடு‌த்து முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக அழகு‌க் கூடு‌ம். வெ‌ள்ள‌ரி ம‌ற்று‌ம் கேர‌ட் சாறை முக‌த்‌தி‌ல் தட‌வி வரலா‌ம். கா‌ல் வெடி‌ப்பு வ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் ந‌ல்ல ப‌ல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

சரும‌த்‌தி‌ன் வற‌ட்டு‌த் த‌ன்மைய‌ை‌ப் போ‌க்க, அ‌ன்னா‌சி‌ப் பழ‌‌த்தை அரை‌த்து வற‌ண்ட பகு‌திக‌ளி‌ன் ‌மீது தடவவு‌ம். 15 அ‌ல்லது 20 ‌நி‌மிட‌ங்‌க‌ள் க‌ழி‌த்து கழு‌வினா‌ல் வற‌ட்‌சி த‌ன்மை மாறு‌ம்.

முக‌ப்பரு அ‌திகமாக வரு‌ம் பெ‌ண்க‌ள், எ‌ண்ணெ‌ய் பசையில்லாத ‌நீ‌ர் தன்மையு‌ள்ள ‌க்‌ரீமை முகத்தி‌ற்கு பயன்படுத்தவும்.

‌கி‌ளிச‌ரி‌ன் ம‌ற்று‌ம் ப‌ன்‌னீ‌ர் ஆ‌கியவை உட‌ல் சரும‌த்‌தி‌ற்கு ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.

| 0 Kommentare ]


நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல் துலக்குவீங்க? காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவீர்கள் என்றால், நீங்கள் மாரடைப்பு
பற்றி கவலையே பட வேண்டாம்.

ஆம், ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்குவோருக்கும், குறைந்த பட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வோருக்கும் இதய பாதிப்பு வாய்ப்பு மிகக்குறைவே என்று லண்டன் ஆய்வு கூறுகிறது.

லண்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வாட் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் இது பற்றி சர்வே எடுத்தனர். இளைய வயதினர், நடுத்தர வயதினர் என்று 11 ஆயிரம் பேரிடம் சர்வே நடத்தப்பட்டது தனி மனிதனின் வித்தியாசமான வாழ்க்கை முறை, புகை பிடித்தல், குண்டாக இருப்பது, குடும்ப பாரம்பரிய சுகாதார பின்னணி போன்றவை தான் இதய பாதிப்பு வர காரணம் என்று கருதப்பட்டது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதும் ஒரு முக்கிய விஷயமாக வாட் கருதினார். சர்வேக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பலரிடமும் இதுபற்றி தகவல்கள் சேகரிக்கச் சொன்னார். பல் துலக்குவது , பல் டாக்டரிடம் காட்டுவது பற்றி முக்கியமாக கேள்வி கேட்கப்பட்டது.

சர்வேயின் முடிவில் வாட் எதிர்பார்த்தபடியே தகவல்கள் கிடைத்தன. இதய பாதிப்பு ஏற்பட, லைப் ஸ்டைல் முதல் உடல் பருமனாக இருப்பது மட்டுமின்றி, பல் ஆரோக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உறுதி செய்தார். கிடைத்த சில முக்கிய தகவல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவோருக்கு பல் திடத்தன்மை குறைவதுடன், இதய பாதிப்பு&ய்க்ஷள்ல்; ஏற்பட அதுவும் காரணமாக உள்ளது தெரிய வந்தது. இந்த வகையினருக்கு இதய பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை கூட பல் துலக்குவதில்லை என்று தெரிய வந்தது. இவர்களுக்கு இதய பாதிப்புக்கு காரணியாக உள்ள ரியாக்டிவ் ப்ரோட்டீன், பைப்ரினோஜென் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வகையினரும் சேர்த்து 70 சதவீதம் பேர் இருந்தனர். இவர்களுக்கு இதய பாதிப்பு பல வகையில் வருவதற்கான அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிலருக்கு மாரடைப்பு வந்ததும் தெரியவந்தது. இரண்டு வேளை பல் துலக்குவோருக்கு பல் சுகாதாரம் திடமாக இருப்பதுடன், இதய பாதிப்பு அறவே இல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு தலைவர் வாட் கூறுகையில், ‘இதய பாதிப்புக்குக் காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், பல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக உள்ளது பலருக்கு தெரிவதில்லை. இதை வலியுறுத்தவே நாங்கள் ஆய்வு எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.

| 0 Kommentare ]


பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர்.

ஆனால் எவ்வளவுக்கு தொழில் நுட்ப ரீதியில் முன்னேறுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக பூமியின் தொடக்காலம் பற்றிய கேள்விகள் ஆழமாகியுள்ளதோடு, அதை ஒட்டிய பல்வேறு திசைகளும் வெளிப்பட்டுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பூமி தற்போது உள்ள நிலையை அடைவதற்கு முன், என்ன வடிவத்தில் இருந்தது என்பது பற்றிய நிலைப்பாடுகள் பல மாறியுள்ளன.

ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் 1924-இல் வெளியிட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த பூமியின் நீர், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னல் ஆகியவற்றிலிருந்து உருவான குழம்பிலிருந்து, உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின என்றார். மிகவும் பிரபலமடைந்தத இக்கோட்பாட்டின் சாத்தியக்கூற்றை ஆராய 1953 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் யூரேயின் மாணவரான ஸ்டான்லி மில்லர் ஈடுபட்டார்.

பூமி உருவாவதற்கு முன்னர் இவ்வுலகம் இருந்த நிலைமையை செயற்கையாக உருவாக்கி, அதில் உண்டாகும் மாற்றங்களை ஆராய்வதே அவரது நோக்கம். மூடிய தெர்மா குடுவை போன்ற அமைப்பில் நீரையும் வாயுவையும் அடைத்தார்.

வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னலுக்கு பதிலாக, அதனுள் மின்சாரத்தை செலுத்தினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, அதிலிருந்த நீர் பழுப்பு வண்ணமடைந்து, புரோதத்தை உருவாக்கக்கூடிய அமினோ அமிலம் தெர்மா குடுவையில் படிந்திருந்ததை அவர் கண்டார். தெளிவுப்படுத்தி எடுக்கப்பட்ட கலவையில் உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கு இன்றியமையாத பல மூலக்கூறுகளையும் கண்டுடறிந்தார். மில்லரின் இந்த சோதனை மூலம், தொன்மையான நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான குழம்பிலிருந்து உயிர் உருவானது என்ற கண்டுபிடிப்பு, பூமி கோளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினால் உயிர்கள் தோன்றியதற்கான ஆதாரமாக புகழப்பட்டது.

| 0 Kommentare ]


மன அமைதியின்மை, மன அழுத்தம் மற்றும் நித்திரையின்மை ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நீரிழிவு வகை 2 (type 2 diabetes) நோய் ஏற்படுவதை ஊக்குவிப்பதாக ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

| 0 Kommentare ]


அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? வேக வைத்த உருளைக்கிழங்கிணை கொஞ்சம் சாப்பிட்உட விட்டு மறுபடி யோசியுங்கள். ஞாபகம் வந்துவிடும்.

சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 60 முதல் 82 வயது வரை மனிதர்களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக்கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொதுழு 37 சதவிதம் பார்லி உண்டதனாலும், 32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரியவந்தது.

| 0 Kommentare ]


புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்ற புகையிலையில் இருந்து கூட குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஒன்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.

| 0 Kommentare ]


கார் திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது.

இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர்.

மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் மல்கொல்ம் கோல்தார்ட், சிரேஷ்ட சிறுவர்கள் சிறுநீரக சிகிச்சை தாதியான ஜீன் குரோஸியர் என்பவருடன் இணைந்து கார் திருத்துமிடத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை உபயோகித்து சிறிய சிறுநீர் சுத்திகரிப்பு உபகரணமொன்றை உருவாக்கினார்.

இதனையடுத்து குழந்தையின் சொந்த சிறுநீரகங்கள் குணமடையும் வரை 7 நாட்களுக்கு இந்த உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம், சிறிது சிறிதாக இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி, தற்போது உயிர் பிழைத்து ஆரோக்கிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

தனது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அதன் தாயாரான ரெபேகா விபரிக்கையில், ""வர்ணப்பூச்சு அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த உலோகப் பெட்டி எனது மகளின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என நான் கனவிலும் நம்பவில்லை. தற்போது எனது மகளுக்கு இரண்டு வயதாகிறது. அவள் தனது சொந்த சிறுநீரகங்களுடன் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றாள்'' என்று கூறினார்

| 0 Kommentare ]


உலகின் மகா குண்டு மனிதரான 310 கிலோ எடை கொண்ட மானுவேல் உரிபே, மிகவும் கனமான பொருட்களை தூக்க உதவும் லிப்ட் மற்றும் பிளாட்பாரம் டிரெய்லர் உதவியுடன், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.மெக்சிகோவில் வசிப்பவர் மானுவேல் உரிபே. இவரின் எடை 560 கிலோவை தாண்டியதால், உலகின் மகா குண்டு மனிதராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததால், அவரின் உடல் எடை 250 கிலோ அளவுக்கு குறைந்தது. இருந்தாலும், படுக்கையை விட்டு எழுந்து அவரால் நடக்க முடியாது. எல்லாமே படுக்கையில் தான்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த உரிபே, 2007ம் ஆண்டு மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியே சென்று வெளியுலகத்தைப் பார்த்தார். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அவரின் இரும்பு படுக்கையை ஆறு பேர் வெளியே தள்ளிச் சென்றனர். அதன்பின்னரே அவர் வெளியுலகத்தைப் பார்த்தார்.

கடந்த மார்ச் மாதமும் அவர் வீட்டை விட்டு வெளியேறி, வெளியுலகத்தைப் பார்க்க நினைத்தார். ஆனால், அவரின் படுக்கையை ஏற்றிச் சென்ற பிளாட்பார டிரக், ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால், அவரால் பெரிய அளவில் எந்தப் பகுதியையும் சுற்றிவர முடியவில்லை. இதன்பின், ஐந்து மாதங்கள் கழித்து சமீபத்தில், முதல் முறையாக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் உரிபே. கனத்த பொருட்களை தூக்க பயன்படுத்தப்படும் லிப்ட் மற்றும் பிளாட்பார டிரெய்லர் உதவியுடன், அவர் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்.

தனக்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே, அவர் மெக்சிகோவின் மான்டெரே நகரில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று, அதன் அழகை ரசித்தார். ஏரிக்கரையில் விற்ற மீனையும் மற்றும் காய்கறிகளையும் வாங்கிச் சாப்பிட்டார். படகோட்டிகளுடன் ஜோக் அடித்துப் பேசினார்.

| 0 Kommentare ]


இயற்கை நமக்கு எண்ணற்ற நல்ல அம்சங்களைக் கொடுத்திருந்தாலும் சில நேரங்களில் திடுக்கிடும் விஷயங்களையும் வழங்கிவிடுகிறது. வங்கதேசத்தில் உள்ள கேஷாப்பூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இரண்டு தலையுடன் இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 5.5 கிலோ எடையுள்ள இக்குழந்தைக்கு கிரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுவதால் இக்குழந்தைக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எதுவுமே புரியாததுபோல கவலை மறந்து தூங்குகிறது இந்தப் பால் மணம் மாறாப் பிஞ்சு.

| 0 Kommentare ]


முட்டை சைவமா? அசைவமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்றைக்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்து வருகிறது. முட்டையில் உள்ள சத்துக்களே இதற்கு காரணமாகும். முட்டையில் வைட்டமின்கள், புரதம், கொழுப்புச்சத்து முதலானவை அளவாக அமைந்துள்ளன. முட்டையில் உள்ள புரதசத்தில் மனித உடலுக்குள் தேவையான புரதக்கூறுகள் சமச்சீர் அளவில் அமைந்துள்ளன.
எனவே வெள்ளைக்கரு புரதம் என்றும் முட்டைபுரதம் என்றும் இருவகைப்படும் புரதங்கள் முட்டையில் உண்டு. இதில் வெள்ளைக்கரு புரதம்தான் மிகச்சிறந்த புரதமாகும். இதில் கந்தகம் கலந்த புரதக்கூறுகள் அதிகம். இப்புரதம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. பருப்பு, பால், இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட முட்டைபுரதம் மிகுந்ததாகும். மனித உடலில் புது திசுக்கள் வளரவும், தேய்ந்துபோன திசுக்கள் வளரவும் என்சைம், ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது.

முட்டையில் 11 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து அனைத்தும் முட்டையில் மஞ்சள் கருவில் இருக்கிறது. இது எளிதில் ஜீரணிக்ககூடியது. முட்டையில் 0.63கிராம் லிந்தெலியிக் என்னும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் 230 மில்லிகிராம் கொலஸ்டரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. தினமும் ஒரு நபர் 2 முட்டை சாப்பிட்டால் 11 கிராம் கொழுப்புச்சத்து கிடைக்கிறது. வைட்டமின் சி-யைத் தவிர மற்ற எல்லா வைட்டமின்களும் முட்டையில் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் வெள்ளைக்கருவிலும் மஞ்சள் கருவிலும் உள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய ஏ, டி வைட்டமின்கள் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. இவைகள் தவிர அலனின், அஸ்பார் டிக் அமிலம், சிங்டைன் குறுமோடாக் அமிலம், கிளைசின், புரொலின், செரின்,தைரோசின்,வேலின் போன்ற புரதசத்துக்களும் முட்டையில் இருக்கின்றன. வெள்ளைக்கருவை விட மஞ்சள் கரு லேசானது. முட்டையின் எடையில் மஞ்சள் கரு மூன்றில் ஒரு பங்கே இருக்கின்றது. வெள்ளைக் கருவில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதோடு தாது உப்புக்கள் 0.6 சதவிதம் உண்டு. இது பசும்பாலுக்குச் சமமானது. இதனால் நோயாளிகள் கூட பயமின்றி வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.


- விடுதலை வீரா