கார் திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது.
இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர்.
மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் மல்கொல்ம் கோல்தார்ட், சிரேஷ்ட சிறுவர்கள் சிறுநீரக சிகிச்சை தாதியான ஜீன் குரோஸியர் என்பவருடன் இணைந்து கார் திருத்துமிடத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை உபயோகித்து சிறிய சிறுநீர் சுத்திகரிப்பு உபகரணமொன்றை உருவாக்கினார்.
இதனையடுத்து குழந்தையின் சொந்த சிறுநீரகங்கள் குணமடையும் வரை 7 நாட்களுக்கு இந்த உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம், சிறிது சிறிதாக இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி, தற்போது உயிர் பிழைத்து ஆரோக்கிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
தனது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அதன் தாயாரான ரெபேகா விபரிக்கையில், ""வர்ணப்பூச்சு அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த உலோகப் பெட்டி எனது மகளின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என நான் கனவிலும் நம்பவில்லை. தற்போது எனது மகளுக்கு இரண்டு வயதாகிறது. அவள் தனது சொந்
அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? வேக வைத்த உருளைக்கிழங்கிணை கொஞ்சம் சாப்பிட்உட விட்டு மறுபடி யோசியுங்கள். ஞாபகம் வந்துவிடும்.
சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 60 முதல் 82 வயது வரை மனிதர்களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக்கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொதுழு 37 சதவிதம் பார்லி உண்டதனாலும், 32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரியவந்தது.
பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி மாதிரி' என்று சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள்.
கர்ப்ப கால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. `உடற்பயிற்சி எல்லாம் வேண்டாம், குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தாலே போதும்', பெண்கள் எடை குறைந்து மெலிதாக மாறி விடுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
தாய்ப்பால் மூலம் தாயின் உடலிலுள்ள பெரும்பாலான சக்தி வெளியேறுவதே இதற்கு காரணம். முதல் 14 வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கணிசமான அளவு எடையை இழக்கிறார்கள்.
தாய்ப்பால் அதிகம் அளிக்காத பெண்களுக்கு இந்த எடை இழப்பு ஏற்படுவது இல்லை. எனவே எடை இழக்க, பெண்கள் தாய்ப்பால் அளிப்பது நல்லது.
உலகின் அதி நிறையான மனிதனுக்கு திருமணம்
மெக்ஸகோ நகரைச் சேர்ந்த உலகின் அதி நிறைகூடிய மனிதனான Claudia Solis, Manuel (43) ஆகியோரின் திருமணம் (26-10-08) ந் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது 2006 ம் ஆண்டில் (1.230 இறாத்தல்) 560 கிலோ எடையாக இருந்த இவருக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டமையைத் தொடர்ந்து 250 கிலோ எடை குறைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் சிநேகிதியான Claudia Solis, 38 என்பவருக்கும் இவருக்கும் இடம்பெற்ற திருமண வைபவத்தில் 400 விருந்தாளிகள்வரை பங்குகொண்டு சிறப்பித்துள்ளனர்.
உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.
இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.
மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.
மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீதுதான் பிரியம் அதிகம். எனவே உங்களைவிட நான்தான் கடைக்குட்டி. அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல்.
ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு நாட்டாமை ஆனது.
நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள்காட்டி விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் `அதோ வழி’ என சுட்டிக்காட்டி உதவுகிறது. பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டிருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது.
நீதி: பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அது மட்டுமின்றி தாய்ப்பால் மூலம், மீனின் சத்துகள் குழந்தைக்கு சென்று குழந்தையின் வளர்ச்சிக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும். மீன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பலன் அளிக்கின்றது என்பதை விட பிறக்கும் குழந்தைக்கு அதன்மூலம் பயன் உள்ளதா? என்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அதில், கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு பலன்கள் கிடைக்கும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் குழந்தை பிறந்த 18 மாதங்களில், அதன் மூளை வளர்ச்சியும், உடல் வலிமையும் அதிகரிக்கும். அதே சமயம் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியதும் அவசியம். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிடுவது சிறந்தது. குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் அளிப்பதும் சாதகமான பலன்களைத் தரும்.
பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.
உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.
சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.
நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.
நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.
இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.
சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.
இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B 12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாததல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B 12 குறைபாடு தான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. நீரிழவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்ட்ரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.
காரணம் இதுதான் 107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும், வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, மூளையின் பொருண்மிய நிலையை அறிய NRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன. அவர்கள் எவரது இரத்தத்திலும் B 12 இன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது, அவர்களுக்கு இரத்தத்தில் B 12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும், ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில்
இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.
இதன் அர்த்தம் என்ன? நாம் வழமையாக எதிர்பார்க்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே, எமது உணவில் B 12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
தாவர உணவுகளில் விற்றமின் B 12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12 குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள் மற்றும் முதியவர்களக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும் நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும். அத்துடன், நரம்புகள் பாதிப்படைவதால், கால், கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.
விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும், மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில், அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை. அத்துடன், அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை. எனவே, வயதானவர்கள் மேற்கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.
- மருத்துவர் எம்.கே.முருகானந்தன்
நன்றி: தினக்குரல்
முட்டை சைவமா? அசைவமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்றைக்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்து வருகிறது. முட்டையில் உள்ள சத்துக்களே இதற்கு காரணமாகும். முட்டையில் வைட்டமின்கள், புரதம், கொழுப்புச்சத்து முதலானவை அளவாக அமைந்துள்ளன. முட்டையில் உள்ள புரதசத்தில் மனித உடலுக்குள் தேவையான புரதக்கூறுகள் சமச்சீர் அளவில் அமைந்துள்ளன.
எனவே வெள்ளைக்கரு புரதம் என்றும் முட்டைபுரதம் என்றும் இருவகைப்படும் புரதங்கள் முட்டையில் உண்டு. இதில் வெள்ளைக்கரு புரதம்தான் மிகச்சிறந்த புரதமாகும். இதில் கந்தகம் கலந்த புரதக்கூறுகள் அதிகம். இப்புரதம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. பருப்பு, பால், இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட முட்டைபுரதம் மிகுந்ததாகும். மனித உடலில் புது திசுக்கள் வளரவும், தேய்ந்துபோன திசுக்கள் வளரவும் என்சைம், ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது.
முட்டையில் 11 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து அனைத்தும் முட்டையில் மஞ்சள் கருவில் இருக்கிறது. இது எளிதில் ஜீரணிக்ககூடியது. முட்டையில் 0.63கிராம் லிந்தெலியிக் என்னும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் 230 மில்லிகிராம் கொலஸ்டரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. தினமும் ஒரு நபர் 2 முட்டை சாப்பிட்டால் 11 கிராம் கொழுப்புச்சத்து கிடைக்கிறது. வைட்டமின் சி-யைத் தவிர மற்ற எல்லா வைட்டமின்களும் முட்டையில் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் வெள்ளைக்கருவிலும் மஞ்சள் கருவிலும் உள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய ஏ, டி வைட்டமின்கள் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. இவைகள் தவிர அலனின், அஸ்பார் டிக் அமிலம், சிங்டைன் குறுமோடாக் அமிலம், கிளைசின், புரொலின், செரின்,தைரோசின்,வேலின் போன்ற புரதசத்துக்களும் முட்டையில் இருக்கின்றன. வெள்ளைக்கருவை விட மஞ்சள் கரு லேசானது. முட்டையின் எடையில் மஞ்சள் கரு மூன்றில் ஒரு பங்கே இருக்கின்றது. வெள்ளைக் கருவில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதோடு தாது உப்புக்கள் 0.6 சதவிதம் உண்டு. இது பசும்பாலுக்குச் சமமானது. இதனால் நோயாளிகள் கூட பயமின்றி வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.
தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.
டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:
தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.
தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது. ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.
டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன். இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.
புற்றுநோயை எதிர்க்கும் ஆப்பிள்
பெண்களை பயமுறுத்தும் நோய்களுள் ஒன்று மார்பக புற்றுநோய். அந்த நோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழத்திற்கு உள்ளது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசி ரியர் ரூய் ஹாய் லியு, முதலில் எலிகளுக்கு ஆப்பிள் பழச்சாற்றை கொடுத்து சோதனை செய்தார். இந்த சோதனையில், அந்த எலிகளின் பால் சுரப்பிகளில் ஏற்பட்ட கட்டிகள் அளவில் சிறிதாகின. அத்துடன், அந்த கட்டிகள் எலிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதையடுத்து, சில விலங்குகளை வைத்தும் பேராசிரியர் லியு சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையிலும் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழங்களுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், காய்கறிகளில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பதும் இந்த சோதனையில் கூடுதலாக கண்டறியப்பட்டது.
"மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டால், அந்த நோயின் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்'' என்கிறார் பேராசிரியர் லியு.
முகபருவை தடுக்க
அதிக எண்ணெய்ப் பசை இருந்தால் முகத்தில் பரு வரவாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய்ப் பசையில்லாமல் பார்க்கவும் 1 டீஸ்பூன் ஒரேஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். பயத்த மா, கடலை மா, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் முகம் பொலிவு
தேங்காய் எண்ணெயை முகத்திற்குத் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, கடலை மா, சந்தனப் பொடி, எலுமிச்சைத் தோல் பொடி ஆகியவற்றின் கலவையால் முகத்தைத் தேய்த்துக் கழுவுங்கள். இதைச் செய்து வந்தால் நாளாவட்டத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும்.
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?
நீங்கள் நகர்ப்புறத்தில் வசித்தாலும் சரி, கிராமங்களில் வசித்தாலும் சரி உங்களுக்கு காபியோ, தேநீரோ குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் ஏதாவது ஒரு பத்திரிகையில் காபி குடிப்பது கெடுதல், தேநீர் குடிப்பது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவு சொல்வதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவரும். அடுத்து சில நாட்கள் கழித்து, இதை அப்படியே உல்டா செய்து இன்னாரு தகவல் வெளிவரும். உண்மையில் காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?
இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும்.
காஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.
ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும். உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.
காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது.
தேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம். தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது.
"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.
மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் மாம்பழங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணமுடிகிறது.
மாம்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் `சி' அதிகம் காணப்படுகிறது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும். மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டுதான் சாப்பிடுகிறார்கள். இது தவறு. மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ளது.
மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச்சத்துகள் காணப்படுகின்றன.
மாம்பழத்தின் பூர்வீகமே நம் இந்தியாதான். அப்படி இருக்கும்போது, நாம் மாம்பழம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி...?
திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.
சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.
நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.
மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.
உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு
நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.
இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !
எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.
தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம்.
வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம்!
விவசாயி ஒருவரின் சிறுநீரகத்திலிருந்து சுமார் 500கிராம் எடையுள்ள கல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று மகியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எச்.எம்.ஆரியசேன (வயது 43) என்பவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுநீரகத்தில் கல் இருப்பதனை உறுதி செய்தனர்.
இவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வேளை, வைத்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் 26 சென்றி மீற்றர் சுற்றளவுடைய கல் இருந்தமை தெரிய வந்துள்ளது.
மகியங்கனை வைத்தியசாலையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம்பெற்றது இதுவே முதல் தடைவ என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.