| 0 Kommentare ]


புற்றுநோயை எதிர்க்கும் ஆப்பிள்

பெண்களை பயமுறுத்தும் நோய்களுள் ஒன்று மார்பக புற்றுநோய். அந்த நோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழத்திற்கு உள்ளது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசி ரியர் ரூய் ஹாய் லியு, முதலில் எலிகளுக்கு ஆப்பிள் பழச்சாற்றை கொடுத்து சோதனை செய்தார். இந்த சோதனையில், அந்த எலிகளின் பால் சுரப்பிகளில் ஏற்பட்ட கட்டிகள் அளவில் சிறிதாகின. அத்துடன், அந்த கட்டிகள் எலிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து, சில விலங்குகளை வைத்தும் பேராசிரியர் லியு சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையிலும் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழங்களுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், காய்கறிகளில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பதும் இந்த சோதனையில் கூடுதலாக கண்டறியப்பட்டது.
"மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டால், அந்த நோயின் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்'' என்கிறார் பேராசிரியர் லியு.


முகபருவை தடுக்க  
அதிக எண்ணெய்ப் பசை இருந்தால் முகத்தில் பரு வரவாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய்ப் பசையில்லாமல் பார்க்கவும் 1 டீஸ்பூன் ஒரேஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். பயத்த மா, கடலை மா, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் முகம் பொலிவு 
தேங்காய் எண்ணெயை முகத்திற்குத் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, கடலை மா, சந்தனப் பொடி, எலுமிச்சைத் தோல் பொடி ஆகியவற்றின் கலவையால் முகத்தைத் தேய்த்துக் கழுவுங்கள். இதைச் செய்து வந்தால் நாளாவட்டத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். 
  
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?

நீங்கள் நகர்ப்புறத்தில் வசித்தாலும் சரி, கிராமங்களில் வசித்தாலும் சரி உங்களுக்கு காபியோ, தேநீரோ குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் ஏதாவது ஒரு பத்திரிகையில் காபி குடிப்பது கெடுதல், தேநீர் குடிப்பது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவு சொல்வதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவரும். அடுத்து சில நாட்கள் கழித்து, இதை அப்படியே உல்டா செய்து இன்னாரு தகவல் வெளிவரும். உண்மையில் காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும்.
காஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும். உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது.
 
 
தேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம். தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது.
 

"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
 
 
ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.


மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் மாம்பழங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணமுடிகிறது.
 
மாம்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் `சி' அதிகம் காணப்படுகிறது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும். மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டுதான் சாப்பிடுகிறார்கள். இது தவறு. மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ளது.
 
மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச்சத்துகள் காணப்படுகின்றன.
 
மாம்பழத்தின் பூர்வீகமே நம் இந்தியாதான். அப்படி இருக்கும்போது, நாம் மாம்பழம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி...?

திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்  

 
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.


திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்  

 
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

0 Kommentare

Kommentar veröffentlichen