பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர்.
ஆனால் எவ்வளவுக்கு தொழில் நுட்ப ரீதியில் முன்னேறுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக பூமியின் தொடக்காலம் பற்றிய கேள்விகள் ஆழமாகியுள்ளதோடு, அதை ஒட்டிய பல்வேறு திசைகளும் வெளிப்பட்டுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பூமி தற்போது உள்ள நிலையை அடைவதற்கு முன், என்ன வடிவத்தில் இருந்தது என்பது பற்றிய நிலைப்பாடுகள் பல மாறியுள்ளன.
ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் 1924-இல் வெளியிட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த பூமியின் நீர், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னல் ஆகியவற்றிலிருந்து உருவான குழம்பிலிருந்து, உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின என்றார். மிகவும் பிரபலமடைந்தத இக்கோட்பாட்டின் சாத்தியக்கூற்றை ஆராய 1953 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் யூரேயின் மாணவரான ஸ்டான்லி மில்லர் ஈடுபட்டார்.
பூமி உருவாவதற்கு முன்னர் இவ்வுலகம் இருந்த நிலைமையை செயற்கையாக உருவாக்கி, அதில் உண்டாகும் மாற்றங்களை ஆராய்வதே அவரது நோக்கம். மூடிய தெர்மா குடுவை போன்ற அமைப்பில் நீரையும் வாயுவையும் அடைத்தார்.
வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னலுக்கு பதிலாக, அதனுள் மின்சாரத்தை செலுத்தினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, அதிலிருந்த நீர் பழுப்பு வண்ணமடைந்து, புரோதத்தை உருவாக்கக்கூடிய அமினோ அமிலம் தெர்மா குடுவையில் படிந்திருந்ததை அவர் கண்டார். தெளிவுப்படுத்தி எடுக்கப்பட்ட கலவையில் உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கு இன்றியமையாத பல மூலக்கூறுகளையும் கண்டுடறிந்தார். மில்லரின் இந்த சோதனை மூலம், தொன்மையான நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான குழம்பிலிருந்து உயிர் உருவானது என்ற கண்டுபிடிப்பு, பூமி கோளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினால் உயிர்கள் தோன்றியதற்கான ஆதாரமாக புகழப்பட்டது.
அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? வேக வைத்த உருளைக்கிழங்கிணை கொஞ்சம் சாப்பிட்உட விட்டு மறுபடி யோசியுங்கள். ஞாபகம் வந்துவிடும்.
சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 60 முதல் 82 வயது வரை மனிதர்களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக்கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொதுழு 37 சதவிதம் பார்லி உண்டதனாலும், 32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரியவந்தது.
கார் திருத்துமிடத்தில் இருந்து பெற்ற உலோகங்களைப் பயன்படுத்தி மருத்துவர் ஒருவரால் சுயமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம், சிறுநீரகம் செயலிழந்த பச்சிளம் குழந்தையொன்று காப்பாற்றப்பட்ட அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மில்லி கெல்லி என்ற இந்தக் குழந்தை, குடல் பகுதி உடலுக்கு வெளியே தள்ளிய நிலையில் பிறந்தது.
இந்நிலையில் மேற்படி குறைபாட்டை சீர்செய்யும் முகமாக சத்திரசிகிச்சையொன்றுக்கு குழந்தை உட்பட்ட சமயம், அதன் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தன. இத்தகைய நெருக்கடியான நிலையில் வழமையாக சிறுநீரகம் செயலிழந்த குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் செயற்கை உபகரணத்தை இக்குழந்தைக்கு பொருத்த முடியாத வகையில், குழந்தை மிகவும் சிறியதாக காணப்பட்டதால் என்ன செய்வது என மருத்துவர்கள் திண்டாடினர்.
மேற்படி மருத்துவ சிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் மல்கொல்ம் கோல்தார்ட், சிரேஷ்ட சிறுவர்கள் சிறுநீரக சிகிச்சை தாதியான ஜீன் குரோஸியர் என்பவருடன் இணைந்து கார் திருத்துமிடத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை உபயோகித்து சிறிய சிறுநீர் சுத்திகரிப்பு உபகரணமொன்றை உருவாக்கினார்.
இதனையடுத்து குழந்தையின் சொந்த சிறுநீரகங்கள் குணமடையும் வரை 7 நாட்களுக்கு இந்த உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணத்தின் மூலம், சிறிது சிறிதாக இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறுமி, தற்போது உயிர் பிழைத்து ஆரோக்கிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
தனது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அதன் தாயாரான ரெபேகா விபரிக்கையில், ""வர்ணப்பூச்சு அடையாளங்களுடன் பச்சை நிறத்தில் காணப்பட்ட அந்த உலோகப் பெட்டி எனது மகளின் உயிரைக் காப்பாற்றப் போகிறது என நான் கனவிலும் நம்பவில்லை. தற்போது எனது மகளுக்கு இரண்டு வயதாகிறது. அவள் தனது சொந்த சிறுநீரகங்களுடன் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றாள்'' என்று கூறினார்
உலகின் மகா குண்டு மனிதரான 310 கிலோ எடை கொண்ட மானுவேல் உரிபே, மிகவும் கனமான பொருட்களை தூக்க உதவும் லிப்ட் மற்றும் பிளாட்பாரம் டிரெய்லர் உதவியுடன், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.மெக்சிகோவில் வசிப்பவர் மானுவேல் உரிபே. இவரின் எடை 560 கிலோவை தாண்டியதால், உலகின் மகா குண்டு மனிதராக அறிவிக்கப்பட்டார்.
இதனால், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததால், அவரின் உடல் எடை 250 கிலோ அளவுக்கு குறைந்தது. இருந்தாலும், படுக்கையை விட்டு எழுந்து அவரால் நடக்க முடியாது. எல்லாமே படுக்கையில் தான்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்த உரிபே, 2007ம் ஆண்டு மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியே சென்று வெளியுலகத்தைப் பார்த்தார். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அவரின் இரும்பு படுக்கையை ஆறு பேர் வெளியே தள்ளிச் சென்றனர். அதன்பின்னரே அவர் வெளியுலகத்தைப் பார்த்தார்.
கடந்த மார்ச் மாதமும் அவர் வீட்டை விட்டு வெளியேறி, வெளியுலகத்தைப் பார்க்க நினைத்தார். ஆனால், அவரின் படுக்கையை ஏற்றிச் சென்ற பிளாட்பார டிரக், ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால், அவரால் பெரிய அளவில் எந்தப் பகுதியையும் சுற்றிவர முடியவில்லை. இதன்பின், ஐந்து மாதங்கள் கழித்து சமீபத்தில், முதல் முறையாக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் உரிபே. கனத்த பொருட்களை தூக்க பயன்படுத்தப்படும் லிப்ட் மற்றும் பிளாட்பார டிரெய்லர் உதவியுடன், அவர் வீட்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்.
தனக்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே, அவர் மெக்சிகோவின் மான்டெரே நகரில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று, அதன் அழகை ரசித்தார். ஏரிக்கரையில் விற்ற மீனையும் மற்றும் காய்கறிகளையும் வாங்கிச் சாப்பிட்டார். படகோட்டிகளுடன் ஜோக் அடித்துப் பேசினார்.
இயற்கை நமக்கு எண்ணற்ற நல்ல அம்சங்களைக் கொடுத்திருந்தாலும் சில நேரங்களில் திடுக்கிடும் விஷயங்களையும் வழங்கிவிடுகிறது. வங்கதேசத்தில் உள்ள கேஷாப்பூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இரண்டு தலையுடன் இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 5.5 கிலோ எடையுள்ள இக்குழந்தைக்கு கிரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுவதால் இக்குழந்தைக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் எதுவுமே புரியாததுபோல கவலை மறந்து தூங்குகிறது இந்தப் பால் மணம் மாறாப் பிஞ்சு.
முட்டை சைவமா? அசைவமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்றைக்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்து வருகிறது. முட்டையில் உள்ள சத்துக்களே இதற்கு காரணமாகும். முட்டையில் வைட்டமின்கள், புரதம், கொழுப்புச்சத்து முதலானவை அளவாக அமைந்துள்ளன. முட்டையில் உள்ள புரதசத்தில் மனித உடலுக்குள் தேவையான புரதக்கூறுகள் சமச்சீர் அளவில் அமைந்துள்ளன.
எனவே வெள்ளைக்கரு புரதம் என்றும் முட்டைபுரதம் என்றும் இருவகைப்படும் புரதங்கள் முட்டையில் உண்டு. இதில் வெள்ளைக்கரு புரதம்தான் மிகச்சிறந்த புரதமாகும். இதில் கந்தகம் கலந்த புரதக்கூறுகள் அதிகம். இப்புரதம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. பருப்பு, பால், இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட முட்டைபுரதம் மிகுந்ததாகும். மனித உடலில் புது திசுக்கள் வளரவும், தேய்ந்துபோன திசுக்கள் வளரவும் என்சைம், ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது.
முட்டையில் 11 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து அனைத்தும் முட்டையில் மஞ்சள் கருவில் இருக்கிறது. இது எளிதில் ஜீரணிக்ககூடியது. முட்டையில் 0.63கிராம் லிந்தெலியிக் என்னும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் 230 மில்லிகிராம் கொலஸ்டரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. தினமும் ஒரு நபர் 2 முட்டை சாப்பிட்டால் 11 கிராம் கொழுப்புச்சத்து கிடைக்கிறது. வைட்டமின் சி-யைத் தவிர மற்ற எல்லா வைட்டமின்களும் முட்டையில் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் வெள்ளைக்கருவிலும் மஞ்சள் கருவிலும் உள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய ஏ, டி வைட்டமின்கள் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. இவைகள் தவிர அலனின், அஸ்பார் டிக் அமிலம், சிங்டைன் குறுமோடாக் அமிலம், கிளைசின், புரொலின், செரின்,தைரோசின்,வேலின் போன்ற புரதசத்துக்களும் முட்டையில் இருக்கின்றன. வெள்ளைக்கருவை விட மஞ்சள் கரு லேசானது. முட்டையின் எடையில் மஞ்சள் கரு மூன்றில் ஒரு பங்கே இருக்கின்றது. வெள்ளைக் கருவில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதோடு தாது உப்புக்கள் 0.6 சதவிதம் உண்டு. இது பசும்பாலுக்குச் சமமானது. இதனால் நோயாளிகள் கூட பயமின்றி வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.
- விடுதலை வீரா