| 0 Kommentare ]


எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக  பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின்  அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள்.

இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன.

இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்;க்கப்பட்டுவிட்டனர்.

இவ்வாறான பொருட்களை அதிக விளைக்கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதணிகளை அணிவதால் வளைந்துப்போகிறது. இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது.

அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்து விடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான்.

இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால், தினமும் அதனையே அணியவிரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.

| 0 Kommentare ]


இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத்தரிப்பது தடைசெய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை சத்திரசி கிச்சை செய்து கொள்கிறார்கள். கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்து விடுங்கள்.

உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து நீங்கள் பேசுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். இனி மேல் குழந்தை வேண்டவே வேண்டாமென்று முடி வெடுத்தவர்களுக்கு இந்த முறை சரி. எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு கருத் தடை சாதனம் (ஐயுடி), கருத் தடை மாத்திரை போன்றவை தான் சரியான வழி!

பெண் கருத்தடை சத்திர சிகிச்சை என்றால் என்ன?

கருக்குழாயை வெட்டி அதன் முனையை தையலால் முடிபோட்டுவிடுவது. இந்த குடும்பத்திட்டம் முறை தான் பாதுகாப்பான, நிரந்தரமான பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை இந்த கருக்குழாய் (ஃபேல்லோபியன் டியூப்) கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் உரு வாகியிருக்கும். கரு முட்டையும், விந்தணுவும் இந்த கருக்குழாயின் வழியாக உள்ளே சேர்ந்து கருத்தரிக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு கருக்குழாய்களும் இந்த சத்திரசிகிச்சைக்கு அடைபட்டுவிட்டால், கருமுட்டையால் இந்த குழாயினுள் நுழைய முடியாது. விந்தணு வினாலும் கருமுட்டையைச் சென்றடைய முடியாது. நிறையப் பெண்கள் இப்படி சேர்ந்து வரும் கருமுட்டைகளால் தாங்கள் குண்டாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மூட நம்பிக்கைதான். இதில் நினைவில் வைத் துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம், கரு முட்டை மிகமிக நுண் ணியமானது. தவிர இது 48 மணி நேரத்தில் சிதைந்து போய்விடும்.

இந்த சிகிச்சையினால் உங்களுடைய வாழ்க்கைத் துணைவரின் தாம்பத்திய சுகம் குறையாது. இதற்குப் பிறகு கருத்தரித்து விடு வோமோ என்ற பயமில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதால், தங்களுடைய தாம்பத்திய சுகம் அதி கரித்திருப்பதாக நிறைய தம்பதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போது இந்த கருத்தடை சத்திரசிகிச்சை செய்யலாம்?

பொதுவாக சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பிறந்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 12 நாட்களில் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இந்த சத்திரசிகிச்சையை செய்வதற்கு முன்னால், பிறந்துள்ள குழந்தையின் உடல்நலத்தை குழந்தை நல நிபுணரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, இந்த கருத்தடை சத்திசிகிச்சை செய்ய வேண்டுமென்றால், சிசேரியன் செய்யும்போது இந்த சத்திரசிகிச்சையையும் சேர்த்தே செய்துவிடுவார்கள். இப்படிச் செய்வதினால் வேறு எந்தப் பிரச்சினையும் வராது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலம் தேறுவதற்கான காலமும் அதிகரிக்காது.

இன்ட்ரவல் ஸ்டெரிலைசேஷன்!

இந்த வகை சத்திரசிகிச்சை கர்ப்பமாக இல்லாதபோது செய்யப்படும். ஆனால் பொது வாக மாதவிடாய் வந்தவுடன் செய்தால், அந்தப் பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி செய் யப்படுகிறது?

அனஸ்தீஷியா கொடுத்துவிட்டுதான் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இது ஜெனரல் அனஸ்தீஷியா அல்லது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் அனஸ்தீஷியாவாக இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்க 23 நாட்களாகும். அதனால்தான் வஜைனா வழியாக குழந்தை பிறந்த பெண்களுக்கு உடனே கருத்தடை சத்திரசிகிச்சையை செய்துவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கருப்பை அப் போதும் விரிவடைந்த நிலையி லேயே தொப்புளுக்கு அருகே இருக்கும். தொப்புளுக்குக் கீழே ஒரு சிறிய 22.5 செ.மீ அளவு சத்திர சிகிச்சை செய்வார்கள்.

இந்த கட்' வழியாக கருக்குழாயைக் கண்டுபிடித்து அவைகளை முடிபோட்டு விடுவார்கள். சிசேரியன் செய்யும் போது, அடி வயிறு ஏற்கெனவே திறந்து இருப்பதால் கருக் குழாய்களை சுலபமாக கண்டறிந்து விடலாம். இரண்டு கருக்குழாய்களும் தைக்கப்பட்டு, முடிபோட்டு வெட்டி செய்வார்கள். இந்த கருக் குழாய்கள் குணமானவுடன், துண்டிக்கப்பட்ட இரண்டு நுனிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இதனால் விந்த ணுவால் கருமுட்டைகளை எட்டவே முடியாது.

இந்த கருக்குழாய்களைத் தைத்த பின்பு இந்தச் செய்முறை நிறைவுபெறும். தொப்புளுக்குக் கீழே வெட்டப்பட்ட தோலை மூடி, தைத்து, மேலே பஞ்சு வைத்து டிரெஸ்ஸிங் செய்து விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை செய்ய 15லிருந்து 30 நிமிடங்ககள் வரை ஆகும். இதற்குப் பிறகு வைத்தியசாலையில் 23 நாட்கள் அதிகமாக தங்க வேண்டிவரும். கர்ப்பமாக இல்லாத பெண்ணுக்கு அடிவயிற் றில் ஒரு சிறிதளவாக வெட்டி செய்து கருக்குழய்களை முடிபோட்டுவிடுவார்கள்.

இப்போதெல்லாம் இதை லேப்ரோஸ்கோப்பி முறையால் செய்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி வழியாக செய்தால் கருக்குழாயை அடைப் பதற்கு /பில்லோப் ரிங் அல்லது கார்ட்ரி செய்வார்கள்.

கருத்தடை சத்திரசிகிச்சைக்கு பிறகும் கர்ப்பம்

இந்த கருத்தடை சத்திரசிகிச்சை பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஆபத்து சிறிதளவே. ஆயிரத்தில் 46 பெண் கள் கருத்தரிக்கலாம். இது எப்படி நிகழ்கிறது என்றால், வெட்டப்பட்ட கருக்குழாய்கள் வளர்ந்து இணைந்துவிடும். இது தன்னாலேயே ஆவதால் இந்த முறையைப் பயனற்ற முறை என்று சொல்லிவிட முடியாது.

| 0 Kommentare ]

போல‌ந்து நாட்டைச் சேர்ந்த‌ மேற்படி 35 வயது நபர், 5 வருடங்களுக்கு முன் ஹேர்ன் (Herne) நகரில் புதுவருட தினத்தில் விருந்துபசாரமொன்றில் கலந்து மது அருந்திவிட்டு வீதியில் சென்ற வேளை அவரது தலையில் துப்பாக்கி ரவையொன்று பாய்ந் துள்ளது.


அந்நபர் இதன்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்களின் உதவியை நாடாது கைவைத்தியம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தனது தலையின் பின்புறம் வீக்கம் இருப்பதை உணர்ந்து அந்நபர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.

அவரது தலையை எக்ஸ்ரே படம் எடுத்த மருத்துவர்கள், தலையை ஏதோ கடினமான பொருள் ஊடுருவியிருப்பதை அறிந்து அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டனர். இதன்போது அவரது தலையில் இருந்த கடினமான பொருள் துப்பாக்கி ரவை என்பது கண்டறியப்பட்டது.

புதுவருட தினக் களியாட்டத்தின் போது வேடிக்கைக்கõக வெட்டவெளியில் தீர்க்கப் பட்ட துப்பாக்கி வேட்டே மேற்படி நபரை தவறுதலாக தாக்கியிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலையின் பின்புறம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான நபரொருவர், 5 வருடங்களாக தனது தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்திருப்பதை அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
போல‌ந்து நாட்டைச் சேர்ந்த‌ மேற்படி 35 வயது நபர், 5 வருடங்களுக்கு முன் ஹேர்ன் (Herne) நகரில் புதுவருட தினத்தில் விருந்துபசாரமொன்றில் கலந்து மது அருந்திவிட்டு வீதியில் சென்ற வேளை அவரது தலையில் துப்பாக்கி ரவையொன்று பாய்ந் துள்ளது.

அந்நபர் இதன்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்களின் உதவியை நாடாது கைவைத்தியம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தனது தலையின் பின்புறம் வீக்கம் இருப்பதை உணர்ந்து அந்நபர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.

அவரது தலையை எக்ஸ்ரே படம் எடுத்த மருத்துவர்கள், தலையை ஏதோ கடினமான பொருள் ஊடுருவியிருப்பதை அறிந்து அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டனர். இதன்போது அவரது தலையில் இருந்த கடினமான பொருள் துப்பாக்கி ரவை என்பது கண்டறியப்பட்டது.

புதுவருட தினக் களியாட்டத்தின் போது வேடிக்கைக்கõக வெட்டவெளியில் தீர்க்கப் பட்ட துப்பாக்கி வேட்டே மேற்படி நபரை தவறுதலாக தாக்கியிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

| 0 Kommentare ]


ஹாலிவுட்டில் எடுத்த ஒரு ‘அனிமேஷன்’ படத்தில், அதுவும் விலங்குகளை நாயக நாயகியராக சித்தரிக்கும் ஒரு படத்தில் மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்ல முடியும் என்பதை குங்க்ஃபூ பாண்டா (Kungfu Panda) திரைப்படம் நிரூபித்திருக்கிறது. கதை ஒன்றும் பிரமாதமானதில்லை. சாதாரணமானது தான்.

பண்டைய சீனத்தில் நடப்பதாகக் காட்டப்படும் இத்திரைப்படத்தில் போ (Po) என்ற கரடி தான் கதாநாயகன். தந்தையின் நூடுல்ஸ் கடையில் சர்வராக வேலை பார்க்கிறது. ஆனால் அதன் மனதில் ஒரு பெரிய குங்க்ஃபூ வீரனாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் குங்க்ஃபூ வீரனாகக் கூடிய உடலமைப்போ திறமையோ அதனிடம் இருக்கவில்லை.

எப்போதும் தின்பதிலேயே மிக ஆர்வமாக இருக்கும் போவுக்கு உடலும் பருமனாக இருந்தது. அந்த ஊரில் அதன் தந்தையின் நூடுல்ஸ் சுவைக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது. அதன் சுவைக்கு அவர் ரகசியமாக எதையோ சேர்க்கிறார் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். அவரோ போ உட்பட யாருக்கும் அந்த ரகசியச் சேர்க்கை விவரத்தை சொல்லாமல் இருந்தார்.

ஊருக்கு அருகே உள்ள மலையில் குங்க்ஃபூ கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் எல்லோருக்கும் குரு போன்ற ஊக்வே (Oogway) என்ற வயதான ஆமை இருக்கிறது. ஊரையே அழிக்கக்கூடிய, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாய் லூங் (Tai Lung) என்ற சிறுத்தைப் புலி சிறையிலிருந்து தப்பித்து வரும் என்றும் அது ஊரை அழிக்காமல் காப்பாற்ற ஒரு புதிய மாவீரனால் மட்டுமே முடியும் என்று ஊக்வே ஆருடம் சொல்கிறது.

அந்த புதிய மாவீரன் யார் என்பதில் ஐந்து விலங்குகளுக்குள் போட்டி இருக்கிறது. அவை பெண் புலி, நாரை, ஒரு வகை நீண்ட பூச்சி, பாம்பு மர்றும் குரங்கு. அந்த ஐந்துமே ஒவ்வொரு விதத்தில் திறமையும் சக்தியும் வாய்ந்தவை. அந்த ஐந்துக்குமே குரு ஷிபு என்ற சிறுத்த செங்கரடி. குங்க்ஃபூ கோயிலில் அந்த ஐந்தில் யார் ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று போட்டிச் சண்டை நடக்கிறது. அதைக் காண ஊரே திரண்டு கோயிலுக்குபொ போகிறது. போவும் ஆர்வமாக மலையேறிச் செல்கிறது.

அது நடக்க முடியாமல் நடந்து போவதற்குள் போட்டி ஆரம்பிக்க கோயில் கதவு சாத்தப்பட்டு விடுகிறது. எப்படியாவது அந்த போட்டியைப் பார்க்க வேண்டும் ஆர்வத்தில் அருகில் இருந்த ஒரு மரமேறி கோயிலுக்குள் போ குதித்து விட அது வந்த விதத்தில் அதுவே ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று ஊக்வே தீர்க்கதரிசனம் சொல்கிறது. இது ஷிபுவையும் அது பயிற்றுவித்த ஐந்து விலங்குகளையும் ஆத்திரமூட்டுகிறது. போவும் தன்னை ஒரு மாவீரனாக ஒத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. அந்த ஐந்து விலங்குகளும், ஷிபுவும் அந்த போவைத் துரத்த முயற்சிக்கின்றன.

ஊக்வேயின் மரணக் கட்டத்தில் ஷிபு, தனக்கும் குருவான ஊக்வேயின் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக் கொண்டு போவுக்கு குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. எல்லா சக்திகளுக்கும் ரகசியத்தை எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஓலையை தக்க சமயத்தில் போவுக்குத் தருமாறு ஷிபுவை ஊக்வே பணித்து விட்டு இறந்து விடுகிறது. ஊக்வே தீர்க்கதரிசனத்தின்படிகடும் எதிரியான டாய் லுங் சிறையில் இருந்து தப்பித்து ஊருக்கு வருகிறது. அதை வர விடாமல் தடுக்க தங்களை மாவீரர்களாக நினைத்துக் கொண்டிருந்த ஐந்து விலங்குகளும் முயற்சித்து தோற்றுப் போகின்றன.

டாய் லுங் வரும் முன் ஷிபு போவிடம் அந்த ரகசிய ஓலையைத் தந்து பிரித்துப் படிக்குமாறு சொல்கிறது. அதைப் போ பிரித்துப் பார்த்தால் அது வெறுமையாக இருக்கிறது. அது கண்ணாடி போல் பார்ப்பவர் முகத்தைக் காட்டுகிறது. டாய் லுங்கும் கோயிலுக்கு வந்து ரகசிய ஓலையை ஷிபுவிடம் கேட்க போ அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறது. ஆனாலும் நம்பாத டாய் லுங் அதைப் பிரித்துப் பார்த்து கோபம் கொள்கிறது.

ஊக்வே சொன்ன மாவீரன் யார், அவனை இப்போதே அழித்துக் காட்டுகிறேன் என்று டாய் லுங் சவால் விடுகிறது. பாண்டா நான் தான் அந்த மாவீரன் என்று சொல்ல இந்த வலுவில்லாத குண்டுக்கரடியா மாவீரன் என்று டாய் லூங் எள்ளி நகையாடுகிறது. ஆனால் நடக்கும் சண்டையில் போ டாய்லுங்கை அழித்து வெற்றி கொண்டு ஊரைக் காப்பாற்றுகிறது. இது தான் கதை.

ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், அங்கங்கே பேசப்படும் வசனங்களில், வாழ்க்கையின் தத்துவங்கள் அழகாக சொல்லப்படுகின்றன.

போ குங்க்ஃபூ கோயிலுக்குள் போட்டியின் போது வந்த விதத்தை வைத்து ஊக்வே அதை மாவீரனாக ஆருடம் சொல்ல ஷிபு தனக்கும் குருவான ஊக்வேயிடம் போ வந்த விதம் ஒரு தற்செயல் தான் என்று சொல்ல ஊக்வே அமைதியாகச் சொல்கிறது.


”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை”. உலகத்தில் எல்லாமே ஒரு காரண காரியத்துடன் தான் நடக்கிறது


என்று உறுதியாக அது சொல்கிறது.

இன்னொரு இடத்தில் ஷிபுவிற்கும், ஊக்வேயிற்கும் ஒரு தெய்வீகக் கனிமரத்தின் முன் சர்ச்சை நடக்கிறது. ஊக்வே ஷிபுவிடம் அந்த மரத்தைக் காட்டிச் சொல்கிறது. “பார் ஷிபு. இந்த மரத்தை நாம் நினைக்கிற காலத்தில் பூப்பூக்க வைக்கவோ, கனிகளைத் தாங்க வைக்கவோ முடியாது”

ஷிபு: ஆனால் குருவே சில விஷயங்களை நாம் நம் விருப்பப்படி செய்விக்க முடியும். இந்தக் கனிகளை எப்போது கீழே விழ வைப்பது, எங்கு இந்த மரத்தை நடுவது போன்ற விஷயங்கள் நம் கையில் தானே இருக்கின்றன.

ஊக்வே: அது சரி தான்! ஆனால் நீ என்ன தான் செய்தாலும் இந்த விதையிலிருந்து நீ இந்தக் கனியைத் தான் பெற முடியும். வேறு கனியைப் பெற முடியாது.

இப்படி சரியே ஆன இருவேறு வகை விவாதங்களும் இதில் உண்டு.

தான் தான் அந்த மாவீரன் என்று நம்பாமல் அங்கிருந்து ஒரு இரவு வேறு வழியாக வெளியேறப் பார்க்கும் போவிடம் ஊக்வே சொல்கிறது. “எந்தப் பாதையை நாம் தவிர்க்க நினைக்கிறோமோ, பெரும்பாலும் அந்தப் பாதையில் தான் நாம் நம் விதியை சந்திக்கிறோம்”

நேற்று வரை எந்தப் பயிற்சியும், திறமையும் இல்லாத தன்னால் எப்படி மாவீரன் ஆக முடியும் என்று சந்தேகப்படும் போவிடம் ஊக்வே சொல்கிறது.


“நேற்று என்பது வரலாறு. நாளை என்பது ஒரு புதிர். இன்று மட்டுமே உனக்கு பரிசாக வழங்கப்படுகிறது. ஆகவே தான் ஆங்கிலத்தில் இன்று என்பதை ‘present’ என்று சொல்கிறார்கள்.”


எனவே நேற்றைப் பற்றி கவலைப்படாமல், நாளை பற்றி பயப்படாமல், பரிசாகக் கிடைத்திருக்கும் இன்றைய நாளை நல்ல முறையில் பயன்படுத்தி சாதனை புரியச் சொல்கிறது ஊக்வே.

மற்ற விலங்குகளைப் பயிற்றுவித்தது போல் போவையும் பயிற்றுவிக்க முயன்று முடியாமல் போகவே ஷிபு ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறது. தின்பதில் மிக ஆர்வம் உள்ள போவிடம் ஒரு தட்டு நிறைய தின்பண்டங்களை வைத்து அதனிடம் தருகிறது.

அதைச் சாப்பிட போ முயற்சிக்கும் போது அதைத் தட்டி விடுகிறது. ஒவ்வொரு முறையும் போ முயற்சிக்க, ஷிபு விதவிதமாகத் தட்டி விட்டு அந்த அசைவுகள் மூலமாகவே குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. கடைசியில் நிஜமாகவே அந்த அசைவுகளில் போ தேர்ச்சி பெற்றவுடன் கடைசியில் தின்பண்டத்தை சாப்பிடத் தருகிறது. ஆனால் தேர்ச்சி பெற்ற மனநிறைவில் போ அதைச் சாப்பிடாமல் சொல்கிறது. “எனக்கு பசிக்கவில்லை”

வாழ்க்கையில் நாம் மிக முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம், நாம் பெரும் சாதனை புரிந்து மனநிறைவில் இருக்கும் கால கட்டங்களில் அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம் என்பதை இந்த சிறிய காட்சி அழகாகச் சொல்கிறது.

சக்திகளுக்கு மந்திரமாகக் கருதப்பட்ட அந்த ரகசிய ஓலை வெறுமையாக இருப்பது அழகான வாழ்க்கைத் தத்துவம். அதில் பார்ப்பவர் முகம் தெரிகிறது. எல்லா சக்திகளுக்கும் ரகசியச்சாவி நீ தான் என்பதை அழகாக அந்த காட்சி சொல்கிறது. அதே போல் போ தன் தந்தையிடம் சென்று நூடுல்ஸின் ரகசிய சேர்க்கை பற்றி கேட்கும் போது அந்த தந்தையும் ரகசியமாக போவிடம் ஒத்துக் கொள்கிறார். ”அப்படி ஒரு ரகசியக் சேர்க்கையே இல்லை”

போ ஆச்சரியத்துடன் கேட்கிறது. “பின் எப்படி அது பிரத்தியேக ருசியுடன் இருக்கிறது”

தந்தை சொல்கிறார். ”எதற்கும் சிறப்பு கூடுவதே அதற்கு சிறப்பு இருப்பதாக எல்லோரும் நம்பும் போது தான்.”

எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. எண்ணங்களே எதையும் எப்படியும் உருவாக்குகின்றன என்பதை போ உணர்கிறது. பின் அந்த ரகசிய ஓலையின் வெறுமையையும் பார்த்த பின்னர் போ ஞானம் பெறுகிறது. “எல்லாம் நீ தான்”. இந்த உண்மையை வெறுமையான ரகசிய ஓலையைப் பார்த்துக் கோபம் அடைந்த டாய் லூங்கிடம் கூட ஒரு கட்டத்தில் போ சொல்கிறது. ஆனால் அழியப் போகும் டாய் லூங் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அழியப் போகிறவர்கள் உண்மையை உணர மறுப்பார்கள் என்பதற்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இப்படி குழந்தைகள் பார்க்கும் படம் போல் இருந்தாலும், மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்கே உள்ளடக்கி இருக்கிற விதம் அருமை.

-என்.கணேசன்

| 0 Kommentare ]



பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.

நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர், இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.

ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர், கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.

ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்து கொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ,
ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.

ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.

நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.

| 0 Kommentare ]



ஜனவரி
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்

| 0 Kommentare ]



உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.

உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.

உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.

உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.
உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.

உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.

உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.

உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.

உலகின் மிகப் பெரிய விமான நிலையம் ரியாத்திலுள்ள காலித் மன்னர் பன்னாட்டு விமான நிலையம் தான்.

உலகின் மிகப் பெரிய கடல்துறைமுகம் அமரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுகம் தான்.

உலகின் மிகப் பெரிய இரயில்வே பிளாட்பாரம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் பிளாட்பாரம் தான்.

| 0 Kommentare ]



" உலகின் புனித பூமி" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்

" மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து.

" கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா

" வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

" உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.

" நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து.

" அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா.

" கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

" ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக் கடல்

" தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.

" ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து.

" நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே

" இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்.

" ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி.

" ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்.

" வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.

"சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.


நதிகளே இல்லாத நாடு - சவூதி அரேபியா.

காகங்கள் இல்லாத நாடு - நியூஸிலாந்து.

கொசுக்கள் இல்லாத நாடு -பிரான்ஸ்.

திரையரங்குகளே இல்லாத நாடு -பூட்டான்.

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிட்ஸர்லாந்து.

வருமான வரி விதிப்பு இல்லாத நாடு -குவைத்.

எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர் -அக்பர்.

ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னர் -முதலாம் ஜார்ஜ்.

குதிக்கத் தெரியாத மிருகம் -யானை.

கண்களிருந்தும் பார்வை இல்லாத விலங்கு -வவ்வால்.

எலும்புக் கூடு இல்லாத விலங்கு -ஜெல்லி மீன்.

பாலூட்டிகளில் நீந்தத் தெரியாத இரு விலங்குகள் -ஒட்டகம், பன்றி.

நீர் குடிக்காத விலங்கு - எலி, கங்காரு.

கூடு கட்டாத பறவை -குயில்.

விதை இல்லாத பழம் -அன்னாசி.

| 0 Kommentare ]


வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா