போலந்து நாட்டைச் சேர்ந்த மேற்படி 35 வயது நபர், 5 வருடங்களுக்கு முன் ஹேர்ன் (Herne) நகரில் புதுவருட தினத்தில் விருந்துபசாரமொன்றில் கலந்து மது அருந்திவிட்டு வீதியில் சென்ற வேளை அவரது தலையில் துப்பாக்கி ரவையொன்று பாய்ந் துள்ளது.
அந்நபர் இதன்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்களின் உதவியை நாடாது கைவைத்தியம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தனது தலையின் பின்புறம் வீக்கம் இருப்பதை உணர்ந்து அந்நபர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
அவரது தலையை எக்ஸ்ரே படம் எடுத்த மருத்துவர்கள், தலையை ஏதோ கடினமான பொருள் ஊடுருவியிருப்பதை அறிந்து அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டனர். இதன்போது அவரது தலையில் இருந்த கடினமான பொருள் துப்பாக்கி ரவை என்பது கண்டறியப்பட்டது.
புதுவருட தினக் களியாட்டத்தின் போது வேடிக்கைக்கõக வெட்டவெளியில் தீர்க்கப் பட்ட துப்பாக்கி வேட்டே மேற்படி நபரை தவறுதலாக தாக்கியிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலையின் பின்புறம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான நபரொருவர், 5 வருடங்களாக தனது தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்திருப்பதை அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
போலந்து நாட்டைச் சேர்ந்த மேற்படி 35 வயது நபர், 5 வருடங்களுக்கு முன் ஹேர்ன் (Herne) நகரில் புதுவருட தினத்தில் விருந்துபசாரமொன்றில் கலந்து மது அருந்திவிட்டு வீதியில் சென்ற வேளை அவரது தலையில் துப்பாக்கி ரவையொன்று பாய்ந் துள்ளது.
அந்நபர் இதன்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்களின் உதவியை நாடாது கைவைத்தியம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தனது தலையின் பின்புறம் வீக்கம் இருப்பதை உணர்ந்து அந்நபர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
அவரது தலையை எக்ஸ்ரே படம் எடுத்த மருத்துவர்கள், தலையை ஏதோ கடினமான பொருள் ஊடுருவியிருப்பதை அறிந்து அதனை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற் கொண்டனர். இதன்போது அவரது தலையில் இருந்த கடினமான பொருள் துப்பாக்கி ரவை என்பது கண்டறியப்பட்டது.
புதுவருட தினக் களியாட்டத்தின் போது வேடிக்கைக்கõக வெட்டவெளியில் தீர்க்கப் பட்ட துப்பாக்கி வேட்டே மேற்படி நபரை தவறுதலாக தாக்கியிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[10:43
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen