| 0 Kommentare ]


நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல் துலக்குவீங்க? காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவீர்கள் என்றால், நீங்கள் மாரடைப்பு
பற்றி கவலையே பட வேண்டாம்.

ஆம், ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்குவோருக்கும், குறைந்த பட்சம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் பல் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்வோருக்கும் இதய பாதிப்பு வாய்ப்பு மிகக்குறைவே என்று லண்டன் ஆய்வு கூறுகிறது.

லண்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் வாட் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் இது பற்றி சர்வே எடுத்தனர். இளைய வயதினர், நடுத்தர வயதினர் என்று 11 ஆயிரம் பேரிடம் சர்வே நடத்தப்பட்டது தனி மனிதனின் வித்தியாசமான வாழ்க்கை முறை, புகை பிடித்தல், குண்டாக இருப்பது, குடும்ப பாரம்பரிய சுகாதார பின்னணி போன்றவை தான் இதய பாதிப்பு வர காரணம் என்று கருதப்பட்டது. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதும் ஒரு முக்கிய விஷயமாக வாட் கருதினார். சர்வேக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பலரிடமும் இதுபற்றி தகவல்கள் சேகரிக்கச் சொன்னார். பல் துலக்குவது , பல் டாக்டரிடம் காட்டுவது பற்றி முக்கியமாக கேள்வி கேட்கப்பட்டது.

சர்வேயின் முடிவில் வாட் எதிர்பார்த்தபடியே தகவல்கள் கிடைத்தன. இதய பாதிப்பு ஏற்பட, லைப் ஸ்டைல் முதல் உடல் பருமனாக இருப்பது மட்டுமின்றி, பல் ஆரோக்கியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உறுதி செய்தார். கிடைத்த சில முக்கிய தகவல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவோருக்கு பல் திடத்தன்மை குறைவதுடன், இதய பாதிப்பு&ய்க்ஷள்ல்; ஏற்பட அதுவும் காரணமாக உள்ளது தெரிய வந்தது. இந்த வகையினருக்கு இதய பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஒரு முறை கூட பல் துலக்குவதில்லை என்று தெரிய வந்தது. இவர்களுக்கு இதய பாதிப்புக்கு காரணியாக உள்ள ரியாக்டிவ் ப்ரோட்டீன், பைப்ரினோஜென் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வகையினரும் சேர்த்து 70 சதவீதம் பேர் இருந்தனர். இவர்களுக்கு இதய பாதிப்பு பல வகையில் வருவதற்கான அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிலருக்கு மாரடைப்பு வந்ததும் தெரியவந்தது. இரண்டு வேளை பல் துலக்குவோருக்கு பல் சுகாதாரம் திடமாக இருப்பதுடன், இதய பாதிப்பு அறவே இல்லாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு தலைவர் வாட் கூறுகையில், ‘இதய பாதிப்புக்குக் காரணமாக பல விஷயங்கள் இருந்தாலும், பல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக உள்ளது பலருக்கு தெரிவதில்லை. இதை வலியுறுத்தவே நாங்கள் ஆய்வு எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.

0 Kommentare

Kommentar veröffentlichen