உலகில் ஒரேயொரு இந்து நாடாக விளங்கும் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் சங்கா என்ற இடத்தில் 7 கோடி ரூபா செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிவன் சிலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வரும் 21ம் திகதி திங்கட்கிழமை இச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள வளாகம் ஒன்றில் இது நிறுவப்பட்டுள்ளது.
சிமென்ட் கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 143 அடி. சிவ பெருமானின் தோளில் பாம்பும், கையில் திரிசூலமும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை, நேபாள அதிபர் ராம் பரண் யாதவ் திறந்து வைக்கவுள்ளார்.
சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு யோகா, தியான மண்டபங்கள், சுகாதார மையங்கள் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. 16 அறைகள் கொண்ட ஓய்வு விடுதியும் கட்டப்பட்டுள்ளது.
[03:11
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen