பெங்களூரை சேர்ந்த 92 வயது பாட்டி 78 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கிறார். தினமும் இரண்டு கப் காபி மட்டும் போதும் என்கிறார்.
மனிதனின் உடம்பிற்கு தண்ணீர் தேவையா? இல்லையா? என்ற சர்ச்சை ஒவ்வொரு முறையும் எழுந்து மறைகிறது. பெங்களூரைச் சேர்ந்த நரசம்மா என்ற 92 வயது பாட்டி மீண்டும் இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். இவருக்கு 14 வயதில் மயக்கம் போன்று ஏற்பட்டு, தொண்டை வறண்டுள்ளது. அப்போது ஒரு நாளைக்கு சுமார் 10 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதில் அவரது உடம்பு ஊதி கால்கள் வீங்கி விட்டதாம். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இவரது நிலைமையைப் பார்த்து பெற்றோர் பயந்தனர். ஆயுர்வேத டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு இவருக்கு உடம்பில் அதிகப்படியான தண்ணீர் இருப்பதாகவும், ‘ஸ்டீம் தெரபி’ (நீராவி சிகிச்சை) மூலம் 48 நாட்களுக்கு சிகிச்சை அளித்து தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பலனும் கிடைத்தது. இதற்குப் பின்னர் தண்ணீர் குடிப்பதில்லை என்று சபதம் எடுத்து, குடிப்பதை நிறுத்தி விட்டாராம்.
கடந்த 2000ம் ஆண்டில் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவில் 36 நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இவர் சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் அருந்தவில்லை. இவரது சுற்றுப் பயணத்தில் மொத்தமே 3 கப் காபி மட்டுமே குடித்தாராம். தண்ணீர் குடிக்காமல் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று இவரைக் கேட்டால், நான் ஆயுர்வேத மருந்துகளை மட்டும் சாப்பிடுகிறேன். இதற்கு ஆங்கில மாத்திரைகளைப் போல தண்ணீர் தேவையில்லை. கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து உடம்பை பாதுகாக்கவும்,
உடம்பில் தண்ணீரின் அளவை சரிபடுத்தவும் ஈரத் துணிகளை உடுத்துவேன். அரிசி சாதம், உலர்ந்த பழங்கள் தான் சாப்பிடுவேன். தினமும் 5 மணி நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவேன். ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு உபவாசம் இருப்பேன் என்கிறார். மனித உடம்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அபூர்வமாக நமது உடல் உறுப்புகள் தண்ணீர் தேவையை பல்வேறு வழிகளில் உடம்பில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இந்த மூதாட்டியின் கூற்றை நிரூபிக்க, அவரது உடம்பை முழுவதும் சோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[11:03
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen