| 0 Kommentare ]


சீனாவில் ஒரு நாய்க் குட்டி ஒன்று சிகரெட் புகைக்கப் பழகி உள்ளது. சும்மா அல்ல.... நாளொன்றுக்கு ஒரு சிகரெட் பைக்கெற் வரை ஊதித் தள்ளுகின்றது.

சீனாவின் மத்திய பகுதியில் Hubei மாகாணம் உள்ளது. அங்குதான் Zeng Ziguang என்கிற 23 வயது இளைஞனின் செல்லப் பிராணியாக இது வளர்கின்றது.

Zeng Ziguang கடந்த ஆறு மாத காலமாக இந்நாயை வளர்த்து வருகின்றார். ஒருநாள் அதற்கு விளையாட்டாகச் சிகரெட் புகைக்கப் பழக்கினார். ஆனால் ஆரம்பத்தில் அதற்கு சிகரெட் புகையின் நாற்றம் பிடிக்கவே இல்லை.

ஆனாலும் அதன் எஜமானர் இம்முயற்சியைக் கைவிடவே இல்லை. சிகரெட் புகையை நாயின் முகத்தில் ஊதி ஊதி விட்டிருக்கின்றார். சில வேளைகளில் உணவோடு சேர்த்து சிகரெட்டை உண்ணவும் கொடுத்திருக்கின்றார்.

இவரது ஒரு மாத கால முயற்சி வெற்றி பெற்றது. நாய் சிகரெட் புகைக்கக் கற்றுக் கொண்டது. இப்போது அது புகைத்தலுக்கு அடிமையாகி விட்டது. நாய்க்கு சிகரெட் புகைக்கப் பழக்கிய எஜமானர் மிருகவதைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார் என்பது இன்னொரு விடயம்.

0 Kommentare

Kommentar veröffentlichen