பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் கர்ப்பப்பை ஒரு முக்கிய உறுப்பு. இது அடிவயிற்றினுள் காணப்படும் மாதவிடாயைத் தோற்றுவிக்கும் கர்ப்பப்பையின் உட்சுவர் எண்டோமெற்றியம் (ENDOMETRIUM) என அழைக்கப்படும். இந்த இழையம் சில பெண்களின் கர்ப்பப்பையின் உட்சுவர்ப் பகுதியில் இருப்பதுடன் கர்ப்பப் பையின் வெளியேயும் காணப்படும்.
இந்நிலை எண்டோமெற்றியோசிஸ் (ENDO METRIOSIS) எனப்படும்.இவ்வாறான பெண்களில் மாதவிடாய்க் காலங்களில் கர்ப்பப் பையின் வெளிப்புறங்களிலும் குருதிக் கசிவு ஏற்படுவதனால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
அதாவது அடிவயிற்றிலேற்படும் ஒரு தாங்க முடியாத வலியே ஆகும்.
* எண்டோமெற்றியோசிஸ் ஒரு பொதுவான பிரச்சினையா?
நீங்கள் பொதுவாக இதைப் பற்றி கேள்விப்பட்டிரா விட்டாலும் இது ஒரு பொதுவான நோயாகப் பெண்களில் காணப்படுகிறது. அதாவது நடுத்தர வயதுடைய 10 பெண்களை எடுத்தால் அதில் ஒருவராவது இந்த நோய்க்கு ஆளாகி இருப்பார். அதிலும் வைத்திய ஆலோசனைக்கு வரும் பெண்களில் கூடுதலானவர்களில் இந்நோயை காண்கின்றோம்.
* எண்டோமெற்றியோசிஸ் ஏன் ஏற்படுகின்றது?
இதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விளக்கம் உள்ளது. அதாவது மாதவிடாய்க் காலங்களின் போது கர்ப்பப் பையின் உட்சுவர்ப் பகுதி உடைந்து வெளியேறும் போது அதன் ஒரு பகுதி பலோப்பியன் குழாயினூடாக பின்னோக்கிச் சென்று வயிற்றினுள் தேங்கி வருகின்றது. இதனால் ஒவ்வொரு மாத விடாய் காலங்களிலும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்திலும் குருதி கசிவுகளும் குருதி தேக்கமும் உருவாக நேரிடும். இவ்வாறே இந்த எண்டோமெற்றியோசிஸ் ஒரு பெண்ணின் அடி வயிற்றினுள் காணப்படுகின்றது.
* இதன் நோய் அறிகுறிகள் எவை?
சில பெண்களில் இந்த நோயின் ஆரம்ப நிலையில் எவ்வித நோய் அறிகுறிகளும் ஏற் படாது. மற்றையவர்களில் ஒன்று அல்லது பல நோய் அறிகுறிகள் ஏற்படும். பொதுவாக ஏற்படும் நோய் அறிகுறிகளாவன.
* மாதவிடாய்க் காலங்களில் அடிவயிற்றில் வலி.
* தாம்பத்திய உறவின் போது அடிவயிற்றில் வலி.
* பொதுவான ஒரு அடிவயிற்று வலி.
* குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல்.
இந்த எண்டோமெற்றியோசிஸ் நோயின்போது வயிற்று வலி மாதவிடாய் வருவதற்கு சில நாட்களின் முன்னரே ஆரம்பித்து பின்னர் மாதவிடாய் வருகின்ற நாட்கள் முழுவதும் நீடிக்கும்.
சில பெண்களில் இந்த வயிற்று வலி மாத விடாய் வராத நாட்களிலும் காணப்படும்.
தாம்பத்திய உறவின் போது ஏற்படும் வலி தாம்பத்திய உறவின் பின்னரும் சில மணி நேரம் நீடிக்கும்.
சில பெண்களில் குழந்தைப் பாக்கியம் தா மதமடைவதற்குக் காரணம், அவர்களது தாம் பத்திய உறவே ஒரு வலிமிகுந்த விடயமாக இருப்பதுடன் அப் பெண்களில் இந்த நோயி னால் பலோப்பியன் குழாய்கள் மற்றும் சூல கங்கள் என்பன ஆரோக்கியமற்றதாக இருப்ப துவுமே காரணம். அதாவது இவர்களில் சூல கங்களிலிருந்து முட்டைகள் சயாக வெளி யேற்றப்படுவதுமில்லை, அவ்வாறு வெளி யேற்றப்படும் ட்டைகள் சயாக பலோப்பி யன் குழாயினூடாக பயணிக்க டியாமல் அக்குழாய்கள் அடைபட்டும் இருக்கும். சில பெண்களில் இந்த வயிற்றுவலி அவர்கள் மலங்கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும் போதும் கூட ஏற்படும்.
இந்த நோய் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது?
உங்களது மருத்துவர், இவ்வாறான நோய் அறிகுறிகள் உங்களில் காணப்படும் போது உங்களது அடி வயிற்றைப் பசோதித்துப் பார்ப்பார். இவ்வாறு பசோதிக்கும் போது இந்நோய் இருப்பதாக சந்தேகித்தால் தலில் ஒரு ஸ்கான் (Ultra Sound Scan) பரிசோதனையை மேற்கொள்வார்.
இந்த ஸ்கான் பரிசோதனையின் போது இந்த நோயினால் ஏற்படுத்தப்படும் நாள் பட்ட குருதி சேர்ந்த சூலகக் கட்டியான சொக்லேட் சிஸ்ற் (Chocolate Cyst) இருப்பின் அதனைக் கண்டறியலாம்.
ஆனால் இந்நோயின் மற்றைய நிலைகள் இந்த ஸ்கான் மூலம் கண்டறிய முடியாது. எனவே இந்த சொக்லேட் சிஸ்ற் தவிர ஏனைய நிலைகளில் இந்நோய் இருப்பதனைக் கண்டறிய லப்பிரஸ்கோபி (Laproscopy) பரிசோதனையே சிறந்த முறை. அதாவது உங்களது தொப்பிள் பகுதியினூடாக உங்களை மயக்கிய பின்னர், ஒரு சிறிய குழாய் போன்ற ஒரு புகைப் படக் கருவியை உட்செலுத்தி வயிற் றினுள்ளே இருக்கின்ற உண்மை நில யினை நேரிலே கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும்.
இந்தப் பசோதனையின் போது இந்நோய் இருப்பவர்களின் அடிவயிற்றில் கருநீல மற்றும் சிவந்த புள்ளிகளாகவும் குவியல்களாகவும் இந்த எண்டோமெற்றியோசிஸ் காட்சியளிக்கும். அத்துடன் இந்நோயின் உக்கிர நிலையினையும் இப்பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
இந்தப் பரிசோதனையான லப்பிரஸ்கோப்பி முறைக்கு எடுக்கும் நேரம் 15 - 20 நிமிடங்களே ஆகும். அத்துடன் இது உங்களை முழு மயக்கத்திற்குட்படுத்தியே செய்யப்படும். மேலும் இந்தப் பரிசோதனையின் பின்னர் நீங்கள் அன்றே வீடு செல்லலாம்.
இந்நோய்க்குய சிகிச்சை முறைகள் எவை?
இந்நோய்க்கு சிகிச்சைகள் மருந்துகள் மூலம் சத்திர சிகிச்சைகள் மூலம் வழங்கப்படும்.
சில வேளைகளில் ஒரே பெண்ணிற்கே இவ்விரு முறைகளும் பாவிக்கப்படும்.
சிகிச்சை முறைகள் உங்களது வயது, உங்களது நோய் அறிகுறிகளின் உக்கிரத்தன்மை நீங்கள் கர்ப்பந்தரிக்கும் எண்ணமுடையவரா? மற்றும் உங்களது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.
இந்த சிகிச்சை முறைகளின் நோக்கம் உங்களை வலிகளிலிருந்து விடுவித்து, உங்களது ஆரோக்கிய வாழ்விற்கு வழியமைத்து, உங்களது குழந்தைப் பாக்கியம் தாமதமடைந்திருப்பின் அனைத் துதப்படுத்துவதுமே ஆகும்.
* மருந்துகள் மூலமான சிகிச்சையின் பங்களிப்பு என்ன?
இந்த நோய்க்கு பாவிக்கப்படும் மருந்துகளாக ஓமோன் (Hormones) மாத்திரைகளும் வலி நிவாரணிகளும் (Pain Killers) பாவிக்கப்படுகின்றன.
இந்த ஓமோன் மாத்திரைகள் இந்நோயின் வளர்ச்சியைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தி உங்களது பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வாக அமையும்.
ஆனால் குழந்தைப் பாக்கியத்தைத் துரிதப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த ஓமோன்கள் மூலமான சிகிச்சை சிறந்த தீர்வாக அமையாது. அவர்களுக்கு சத்திர சிகிச்சைகள் மூலமான சிகிச்சைகளே பலனளிக்கும்.
இந்த ஓமோன்களின் மூலமான சிகிச்சையிலுள்ள சிக்கல் என்னவென்றால் பல பக்க விளைவுகளே ஆகும். இதனால் இவை 6 - 9 மாதங்களுக்கே பாவிக்க முடியும்.
* இந்நோய்க்கு சத்திர சிகிச்சையின் (Surgery) பங்களிப்பு என்ன?
இந்த நோய்க்கான சத்திர சிகிச்சைகள் இரு வகைப்படும். அதாவது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றுதல் மற்றும் முற்றாக கர்ப்பப்பை, சூலகங்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட இழையங்களை அகற்றுதல்.
அத்துடன் இந்த சத்திர சிகிச்சைகள் இரு வழிகளில் செய்யப்படும்.
அதாவது வயிற்றில் ஒரு சிறு துளையை மட்டும் ஏற்படுத்தி லப்பிரஸ்கோப்பி (Laproscopy) மூலம் செய்யப்படுவது ஒன்று. மற்றையது வயிற்றில் பெரிய வெட்டை ஏற்படுத்தி பாரம்பயமாக செய்யப்பட்டு வரும் சத்திர சிகிச்சை (Laparotomy)
இளம் பெண்களிலும், குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்து இருப்பவர்களிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இழையங்களை மட்டும் அகற்றி சூலகங்கள், பலோப்பியன் குழாய்கள் மற்றும் கர்ப்பப்பை என்பவற்றைப் பாதுகாப்பாக தங்கவிடப்படும்.
இதன் போதுள்ள சிக்கல் என்னவென்றால் சிறிது காலத்தின் பின் இந்நோய் அவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது.
முற்றாக அகற்றி விடும் சிகிச்சையில் கர்ப்பப்பை, சூலகங்கள் என்பன பாதிக்கப் பட்ட இழையங்களுடன் சேர்ந்து அகற்றப்படுகிறது.
இது சற்று வயது கூடிய பெண்களிலும் (அதாவது 40 வயதை தாண்டியவர்கள்) மற்றும் மீண்டும் குழந்தை பெறும் எண்ணம் இல்லாதவர்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கர்ப்பப்பை, சூலகங்கள் என்பன அகற்றப்படும் பட்சத்தில் உங்களுக்கு இந்நோய் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன் இவர்களுக்கு உடல் பலவீனமடைவதைத் தடுக்க ஓமோன் மாத்திரைகள் சிறிது காலம் பாவிக்கப்பட வேண்டும்.
எனவே வாசகர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் பரம்பரை அலகுகளின் பங்களிப்பினால் சில பெண் களில் ஏற்படுகின்ற இந்தத் துன்பியல் நோய் பல வழிகளில் சிக்கலைத் தோற் றுவிக்கின்றது.
ஆனால் கர்ப்ப காலத்திலும் மற்றும் மாதவிடாய் முடிவடைந்த மெனோபோஸ் (Menopause) நிலைக்கு பின்னரும் இந்நோய் மறைந்து போகின்றது.
மற்றையவர்கள் இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களால் தொடர்ந்தும் வேதனைப்படாது, தற்போதுள்ள இவ்வாறான நவீன சிகிச்சைகள் மூலம் இதற்குத் தீர்வு கண்டு நலமுடன் வாழ ஆலோசனை வழங்குகின்றோம்.
Dr. குருசாமி சுஜாகரன்
[10:05
|
0
Kommentare
]
0 Kommentare
Kommentar veröffentlichen